மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அக்காவிடம் தகராறு செய்த மாமனை அறிவாளால் வெட்டிய 15 வயது சிறுவன்!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு மாணிக்கவிளையை சேர்ந்தவர் பிஜு. இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இந்த தம்பதியினருக்கு 11 மாத குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான பிஜு, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிஜுவின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கேயும் சென்று தகராறு செய்துள்ளார்.
அப்போது அங்கிருந்த பிஜுவின் மச்சான் 15 வயது சிறுவன், தனது அக்காவிடம் தகராறு செய்வதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் முற்றியதில் என் அக்காவிடம் தினமும் சண்டை போடுகிறாய் நீ செத்துப் போ என கூறி அறிவாளால் தலையில் வெட்டியுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பிஜுவை நைட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர்.