மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலித்த பெண்ணுடன் கட்டாய திருமணம்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
விழுப்புரம் அருகே காதலித்த பெண்ணுடன் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீரென அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் அந்த இளைஞரை விசாரித்து, காவல் நிலைய வாசலில் உள்ள கோயிலில் காதலித்த பெண்ணுடன் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால், மன உளைச்சலில் இருந்த ராதாகிருஷ்ணன், காதலித்த பெண்ணின் உறவினர்கள் 5 பேரின் பெயர்களை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.