மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலனை நம்பி சென்ற காதலிக்கு நேர்ந்த கொடூரம்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
செஞ்சி அருகே காதலியை பாலியல் துன்புறுத்தி கொலை செய்த சம்பவத்தில் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து செஞ்சிக்கோட்டையின் நினைவு சின்ன உதவியாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த ரிஹானாபர்வீன் என்பது தெரியவந்தது. மேலும் இவர் புதுச்சேரி களத்தி மேடு பகுதியை சேர்ந்த விஜி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் விஜி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி செஞ்சி மலைக்கோட்டை பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து விஜய் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட விஜய்க்கு ஆயுள் தண்டனையும், 15000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.