புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
திருச்சியில் பரபரப்பு... டாஸ்மாக் பாரில் அடிதடி.!! ரௌடியை தாக்கிய இருவர் கைது.!!
திருச்சி பாலக்கரை டாஸ்மாக் பாரில் 2 ரவுடிகளிடயே ஏற்பட்ட கைகலப்பு கத்திக்குத்தில் முடிந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கரை ரவுடி
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணிகண்டன். 26 வயதான மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் இவர் அப்பகுதியில் ரௌடியாக வலம் வந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று டாஸ்மாக் பாரில் நண்பருடன் மது அருந்தி இருக்கிறார் மணிகண்டன்.
கத்திக்குத்தில் முடிந்த கைகலப்பு
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அப்பு என்ற ரூபனும் தனது நண்பன் நெல்சன் உடன் மது அருந்த வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மது அருந்தி விட்டு வெளியே செல்லும்போது ரவுடி மணிகண்டனுக்கும் அப்பு என்கிற ரூபனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ரூபன் மற்றும் அவரது நண்பன் நெல்சன் ஆகியோர் ரவுடி மணிகண்டனின் கையை கத்தியால் கிழித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் மணிகண்டன் மற்றும் அவரது நண்பன் சேர்ந்து ரூபனையும் நெல்சனையும் கல்லால் தாக்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: "செல்போன் பாக்காதனு சொன்னது ஒரு குத்தமா.." இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.!! காவல் துறை விசாரணை.!!
காவல்துறை வழக்குப்பதிவு
இந்த தாக்குதலால் டாஸ்மாக் பாரே பரபரப்பாகவும் பதற்றமாகவும் மாறியது. இதனைத் தொடர்ந்து பார் நிர்வாகத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "என் ஆள லவ் பண்ணுவியா.." முக்கோண காதலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு.!! ரவுடி கைது.!!