மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலித்து திருமணம் செய்துவிட்டு, மாப்பிள்ளை இப்படி செய்யலாமா? கடுப்பாகி தீர்த்துகட்டிய அண்ணன்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவரது மனைவி முத்துப்பேச்சி. இவர்களுக்கு 21வயதில் விக்னேஷ் ராஜா என்ற மகன் உள்ளார். அவர் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரை காதலித்து வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் மனைவியின் வீட்டில் வசித்து வந்த விக்னேஷ் சில நாட்களிலேயே தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்து, அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சிவகளையில் உள்ள விக்னேஷ் வீட்டிற்கு சென்ற 3 பேர் கொண்ட கும்பல் விக்னேஷ் ராஜா அவரது உறவினர் அருண், லட்சுமணன், முத்துப்பேச்சி ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அருண் மற்றும் முத்துப்பேச்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் விக்னேஷ் மற்றும் லட்சுமணன் ஆகியோர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் முத்துச்சுடர் மற்றும் அருணாச்சலம் ஆகிய மூன்று பேருமே கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து முத்துராமலிங்கம், எனது தங்கையை காதலித்து திருமணம் செய்துவிட்டு பின்னர் வரதட்சணை கேட்டு பிரச்சினை செய்ததால் அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு இவ்வாறு செய்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.