மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த மகன்கள்! காப்பாற்ற முடியாமல் தவித்து நின்ற தந்தை! சோக சம்பவம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தமிழ்செல்வன். அவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு கணேஷ், சிவராஜ் என்ற இருமகன்கள் உள்ளனர். இவர்களில் 22 வயது நிறைந்த கணேஷ் பி.காம் முடித்துவிட்டார் . 18 வயது நிறைந்த சிவராஜ் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் இருமகன்களும் வீட்டிலேயே இருந்தநிலையில், அவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கவேண்டுமென தமிழ்செல்வன் எண்ணியுள்ளார்.
பின்னர் இருமகன்களையும் ஆப்பக்கூடல் கீழ்வானி மாரியம்மன் கோவில் அருகே செல்லும் பவானி ஆற்றுக்கு நேற்று அழைத்து சென்றுள்ளார். அங்கு தமிழ்செல்வன் கரையில் நின்றபடி மகன்களுக்கு ஆலோசனை வழங்க, கணேஷ் மற்றும் சிவராஜ் இருவரும் ஆற்றில் இறங்கி நீச்சல் கற்றுக்கொண்டு இருந்துள்ளனர். அப்பொழுது கணேஷ் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளார். இதை கண்ட சிவராஜ் அண்ணனை காப்பாற்ற எண்ணி அவரும் அங்குசென்று தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதனை கண்டு பதறிப்போன தமிழ்செல்வன் ஆற்றில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். மேலும் அருகே குளித்தவர்களும் ஓடிவந்து இருவரையும் தேடியுள்ளனர். ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் மகன்களின் உடல்களை பார்த்த தமிழ்செல்வன் மகன்களின் சாவிற்கு தானே காரணமாகிவிட்டதாக கதறித்துடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.