திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னை மற்றும் ஈ.சி.ஆரில் இன்று இரவு பஸ்கள் இயங்காது: போக்குவரத்து துறை அறிவிப்பு..!
சென்னை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டத்திலும் இன்று இரவு பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.
மாண்டாஸ் புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 6 மாவட்டங்களில் பேருந்து நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து தற்போது அது குறித்து போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
புயல் பாதிப்பு இருக்கும் இடங்களில் மட்டும் அந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் என்றும், மேலும் மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையில் கடலை ஒட்டிய, கிழக்கு கடற்கரை சாலையில் மட்டும் இரவு நேரங்களில் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து துறை கூறியுள்ளது.