மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தறிகெட்டு இயங்கி டிப்பர் லாரி மீது பாய்ந்த கார்.. 5 வயது குழந்தை உட்பட இருவர் பலி..! 4 பேர் படுகாயம்..!!
கடலூர் மாவட்டம் சேர்வராயன் குப்பம் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார் (வயது 27). கள்ளக்குறிச்சியில் உள்ள ஓகையூறை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 22). இவரின் 5 வயது மகள் உட்பட மூவரும் சிங்கப்பூர் செல்வதற்காக நேற்று இரவு ஒரே காரில் திருச்சி விமானநிலையம் நோக்கி சென்றுள்ளனர்.
இவர்களை வழியனுப்புவதற்காக ஜெயவேல், நாகமுத்து ஆகிய இருவரும் உடன்சென்ற நிலையில், காரை சேர்வராயன் குப்பத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கார் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே திருவலக்குறிச்சி பகுதியில் திருப்ப முயன்றபோது டிப்பர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் சிங்கப்பூர் செல்லவிருந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த ஐந்து வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், காரில் பயணம் செய்த மற்ற மூவரும் படுகாயத்துடனும், டிப்பர் லாரி டிரைவர் லேசான காலங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் பாடாலூர் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில மணி நேரங்களிலேயே சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவிருந்த இருவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.