மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து.! இந்து முன்னணி மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு.!
முகநூல் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி தலைவர் மீது வழக்குப்பதிவு.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வணக்கண்காட்டை சேர்ந்தவர் கற்பக வடிவேல். 33 வயது நிரம்பிய இவர் இந்து முன்னணி புதுக்கோட்டை மாவட்ட தலைவராக உள்ளார். இவர் அவரது முகநூல் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வெள்ளை சக்திவேல் கறம்பக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கற்பக வடிவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.