மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ... ஆ., படம் பார்ப்பவரா நீங்கள்?.. லிஸ்ட் ரெடி..! வீடுகுபுந்து தூக்கப்போகும் காவல்துறை.!!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக அமெரிக்காவின் இன்டர்போல் காவல் துறையினர், இந்தியாவில் சிறார்கள் ஆபாச படம் அதிகளவு பார்க்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசிடம் தெரிவித்து இருந்தது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் இருக்கும் மக்களால் அவை அதிகளவு பார்க்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இன்டர்போல் அளித்த விபரங்களின் பேரில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பகிர்ந்த பலரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள 19 மாநிலங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சிறார் ஆபாச படத்தை பார்த்து பதிவிறக்கம் செய்து பகிர்ந்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும், சமீபத்தில் சிறார் ஆபாச வீடியோ பார்த்தோரின் விபரங்கள் என இவர்கள் அனைவரையும் கைது செய்ய சி.பி.ஐ அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக பல மாநிலங்களில் சி.பி.ஐ. சோதனை நடந்து வருகிறது. முன்னதாக கொரோனா காலகட்டம் தொடங்கியதால் படிப்படியாக சிறார் ஆபாச படத்தை பகிர்ந்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவது குறைந்திருந்த நிலையில், மக்களுக்கு ஏற்பட்ட அச்சம் அதனை செய்திருந்தது. கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட தனிமை மற்றும் பிற காரணங்களால் மீண்டும் ஆபாச வீடியோ பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.