#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பு... மர்ம நபர்கள் குறித்து போலீஸ் தேடுதல் வேட்டை.!
சேலம் மாவட்டத்தில் பள்ளி சென்று திரும்பிய ஆசிரியரின் கழுத்தில் அணிந்திருந்த செயினை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கரோல் ரோஸ்லின்(46). இவர் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று உன்னிடம் மாலை இவர் பள்ளி முடிந்து தனது டிவியில் எக்ஸெல் வாகனத்தில் அப்போது மாலை 6:30 மணி அளவில் இவரது வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியை மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.