96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஊர் பஞ்சாயத்து தகராறு... காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதிகள்.?
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர் பஞ்சாயத்து காரர்கள் தாக்கியதால் கணவன் மற்றும் மனைவி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சூழை வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் மிக்கேல் ராஜ் மற்றும் வைத்தீஸ்வரி. இவர்களது குழந்தைகள் அப்பகுதியில் சேவலை திருடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவரும் நாட்டாமையுமான வேங்கையன் அவரது மனைவி வேளாங்கண்ணி மற்றும் அவர்களது மகன்கள் ஊர் பஞ்சாயத்தை கூட்டினர்.
பஞ்சாயத்தின் போது ஊரில் காணாமல் போன அனைத்து கோழிகளையும் மிக்கேல் ராஜ் மற்றும் வைத்தீஸ்வரி தம்பதியின் குழந்தைகள் தான் திருடியதாக ஒப்புக்கொள்ள சொல்லி வலியுறுத்தி இருக்கின்றனர். இதனை மிக்கேல் ராஜ் மற்றும் வைத்தீஸ்வரி ஆகியோர் மறுத்ததால் அவர்களை சராமாரியாக ஊர் மக்கள் முன்பு தாக்கி உள்ளனர். இது தொடர்பாக மிக்கேல் ராஜ் மற்றும் வைத்தீஸ்வரி ஆகியோர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்லும் முன்பே வேங்கை என் இவர்கள் மீது புகார் அளித்திருக்கிறார்.
இதனால் மனமுடைந்த மிக்கேல் ராஜ் மற்றும் வைத்தீஸ்வரி தம்பதி தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று தீக்குளிக்க முயன்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள காவலர்கள் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார். மேலும் சிப்காட் காவல்துறையினர் மிக்கேல் ராஜ் மற்றும் வைத்தீஸ்வரி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.