மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதல் மோகம்.. கணவனை தீர்த்து கட்டிய மனைவி.. கைதான பரபரப்பு சம்பவம்..!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலையன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் கிண்டியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரான பாபநாசத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சங்கரின் மனைவி கோமதிக்கு அதே ஊரை சேர்ந்த வீரபத்திரன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் கள்ளத்தொடர்பு
சங்கருக்கு தெரிய வரவே தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் சங்கரின் மனைவி வீரபத்திரனுடன் இருந்த கள்ளத்தொடர்பை நிறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வீரபத்திரன் சென்னையில் சங்கர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று சங்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்கவே ஆத்திரமடைந்த வீரபத்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்கரை சரமாரியாக வெட்டியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற வீரபத்திரனை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் வீரபத்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது விசாரணையில் சங்கரின் கொலைக்கு வீரபத்திரனுக்கு உடந்தையாக இருந்தது சங்கரின் மனைவி கோமதி தான் என்பது உறுதியானது. இதனையடுத்து கோமதியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.