மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழக முதல்வர் என்னவாக அறிவித்துள்ளார் தெரியுமா?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 3ஆவது நாளாக இன்று நடைபெற்றது. அதில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முன்னாள் மறைந்த முதல்வரான ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும் போது ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும், ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் ரூ15 கோடியில் தங்கும் விடுதி அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.