பேரதிர்ச்சி.. பரிதாபமாக பறிபோன உயிர்கள்.! பெருந்துயரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்!!



cheif-minister-tribute-to-dead-people-by-bus-accident

ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி
சுற்றுலாப் பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து 13வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து 11வது கொண்டை ஊசி வளையில் செங்குத்தாக நின்றது. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 45க்கும் மேற்பட்டோர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

 இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எக்ஸ் தளபக்கத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

cheif minister

அவர் கூறியதாவது, சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.