மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கராத்தே பயிற்சியில் பாலியல் தொல்லை; மாஸ்டரை ஸ்கெட்ச் போட்டு கதைமுடித்த கணவன் - மனைவி.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை, கானாத்தூர், ரெட்டிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன் (வயது 45). இவர் கராத்தே & யோகா மாஸ்டராக இருந்து வருகிறார். அங்குள்ள செம்மஞ்சேரி பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கராத்தே பயிற்சியும் அளிக்கிறார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரின் மகன் அஜய் (வயது 20), கானாத்தூர் காவல் நிலையத்தில் தந்தை மாயமானது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் லோகநாதனை தேடி வந்தனர்.
அவர் செல்போனில் பேசியவர்கள் குறித்த விபரத்தை சேகரித்து, மாயமாகுவதற்கு முன்பு கஸ்தூரி (வயது 36) என்பவரிடம் இறுதியாக பேசியதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, கஸ்தூரியை கைது செய்து நடத்திய விசாரணையில், யோகா பயிற்சிக்கு வந்தபோது பாலியல் தொல்லை அளித்ததால் லோகநாதனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
கஸ்தூரி அளித்த வாக்குமூலத்தின் பேரில் கணவர் சுரேஷ் (வயது 38) மற்றும் அவரின் கூட்டாளிகள் ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.