மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: கியாஸ் கசிந்து தீ விபத்து; உறங்கிக்கொண்டிருந்த 2 சிறார்கள் பலி., தாய்-குழந்தை படுகாயம்.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய மணியக்காரர் பகுதியை சேர்ந்தவர் சுதாமி. இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவரின் வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கி உறங்கிக்கொண்டு இருந்தவர்களில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு குழந்தை மற்றும் தாய் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.