மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுராந்தகம்: பள்ளி கட்டிடத்தை இரவோடு, இரவாக இடித்து தரைமட்டமாக்கிய கொடூரம்.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், மெய்யூர் ஊராட்சியில் ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் கட்டிடத்தை மர்ம நபர்கள் இரவோடு, இரவாக இடித்து தரைமட்டமாக்கி இருக்கின்றனர்.
மேலும், கட்டிடத்தில் இருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து சென்ற நிலையில், இன்று காலை உள்ளூர் மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நிகழ்விடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட ஊராட்சி மன்ற தலைவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.