மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: லாரி - தனியார் பேருந்து மோதி விபத்து.. 10 பயணிகள் படுகாயம்..!
தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் - தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி, தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது, லாரி - தனியார் பேருந்து சோத்துப்பாக்கம் பகுதியில் செல்கையில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளது.
சாலையில் முன்னால் சென்ற லாரியின் மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளாகவே, பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 10 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவசர ஊர்தி உதவியுடன் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.