மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#ShockingVideo: அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவர்... கூட்ட நெரிசலில் தொங்கிக்கொண்டு பயணிக்கும்போது சோகம்.!
தினமும் காலை & மாலை நேரங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள் பிரதானமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நம்பி இருக்கின்றனர். அவர்களின் ஊரில் இருந்து இயக்கப்படும் குறைந்தளவு பேரூந்துகளால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மேல்மருத்துவர் அருகே பள்ளிக்கு சென்ற மாணவர், பெருந்தின்படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்கிறார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துவிடுகிறார். இதுகுறித்த பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாணவர்கள் படியில் ஆபத்தான வகையில் தொங்கி செல்வதை இருசக்கர வாகன ஓட்டி வீடியோ எடுத்தவாறு பயணிக்கும்போதே, இந்த பதைபதைப்பு சம்பவமும் நடைபெறுகிறது. மேற்படி விழுந்த மாணவர் யார்? அரசு பேருந்தை ஆபத்தான முறையில் இயக்கி சென்றது ஏன்? என விசாரணை நடந்து வருகிறது.