மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரிட்ஜ் வெடித்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் பரிதாப பலி.!
சென்னை தாம்பரத்தை அடுத்த சோலையூர் பகுதியில் வசிப்பவர் பிரசன்னா. தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நிகழ்ந்த அன்று இவரது வீட்டில் இவரது மனைவி அா்ச்சனா, மற்றும் தாயாா் ரேவதி ஆகிய மூவரும் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட மின் கசிவால் சிறிய அளவில் தீ பரவி உள்ளது. பின்னர் வீட்டில் இருந்த குளிர் சாதன பெட்டியில் தீ பரவியதால் பிரிட்ஜ் வெடித்துள்ளது. இதனால் வீடு முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்ஜ் வெடித்த சத்தம் கேட்டதும் எழுந்த மூவரும் பரவிய புகைமூட்டத்தில் காரணமாக வெளியே வர முடியவில்லை. இதனால் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து உள்ளது. இவர்களது வீடு சாலையில் இருந்து உள்புறமாக இருந்ததால் இவர்களின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை. அதிகாலையில் அவ்வழியாக சென்றவர்கள் அந்த வீட்டில் இருந்து வந்த புகை மூட்டம் காரணமாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடா்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து, வீட்டில் இருந்தவா்களை மீட்க முயற்சித்தனா். ஆனால் கடைசியாக மூவரின் மேலும் பற்றிய தீயினால் மூவரும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.