#ShockingTruth: திட்டம்போட்டு நாசமாக்கப்படும் மக்களின் ஆரோக்கியம்.. சென்னைவாசிகளே உங்களுக்குத்தான் எச்சரிக்கை.!



chennai-air-pollution-due-to-metro-and-rainwater-harves

தலைநகரில் நடக்கும் பல்வேறு கட்டுமான பணிகளின் காரணமாக சென்னை வாசிகளின் காற்று மாசுபாடு அடைந்து, அவர்களின் நல்லொரு எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

சென்னையில் நடைபெறும் மெட்ரோ இரயில் மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள் வரலாற்றில் இல்லாத புழுதியால் சென்னை மாநகரம் சூழப்பட்டுள்ளது. இதனால் புழுதி மற்றும் அதனால் ஏற்படும் சுற்றுசூழல் சீர்கேட்டினை கட்டுப்படுத்துவது வளர்ச்சி திட்டத்தின் அங்கம் ஆகும். 

ஆனால், இந்த வளர்ச்சித்திட்டங்களை சரிவர பின்பற்றாத ஒப்பந்ததாரர்கள், தங்களுக்கான திட்ட மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தாலும் அதனை செய்வது இல்லை. இதனால் சென்னை மாநகரமே புழுதியாக மாறிக்கொண்டு இருக்கிறது. மேலும், அதனை சென்னை மாநகராட்சி, தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. 

சுற்றுசூழல் விதிகளை மதிக்காத ஒப்பந்ததாரர்கள் உரிமம் இரத்து செய்யப்பட்டால் மட்டுமே இனி வளர்ச்சி பணிகள் சரியான வழிகளில் மேற்கொள்ளப்படும். மக்கள் காற்று மாசின் தாக்கத்தில் சிக்காமல் தப்பிக்க இயலும். இல்லையேல் அதனால் வரும் விளைவுகளை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும்.