வெளில பார்த்தாதான் எடை மெஷின்.. உள்ளே பார்த்தா கதையே வேற.. பரபரப்பு சம்பவம்..
சென்னையில் இருந்து கத்தாருக்கு கடத்திச்செல்லப்பட்ட இருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டிற்கு செல்லும் சரக்கு விமானம் மூலம் போதை பொருட்கள் கடத்திச்செல்லப்பட்ட இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் கத்தார் செல்லும் சரக்குகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி பார்சல் செய்யப்பட்டிருந்த டிஜிட்டல் எடை மெஷின்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது, டிஜிட்டல் எடை மெஷின் உள்ளே ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 44 கிலோ எடைக் கொண்ட கஞ்சா, ரூ.70 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 620 கிராம் எடைகொண்ட பிரிகேப்லின் என்ற போதை மாத்திரை மற்றும் 700 கிராம் போதை பவுடர் ஆகியவற்றையும் கைப்பற்றினர்.
சுமார் 7 பார்சலில் இருந்த 54 டிஜிட்டல் எடை மெஷின்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனை அடுத்து சம்மந்தப்பட்ட ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாகி, அதன் ஏஜெண்டுகள் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.