#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகனை கொன்றவர்களை கணவன் - மனைவியாக உறவினர்களுடன் சேர்ந்து தீத்துக்கட்ட திட்டம்; மகன்கள் எஸ்கேப் ஆனதால் பலியான தந்தை.!
தனது மகனை கொலை செய்த சகோதரர்களை பழிக்குபழிவாங்க காத்திருந்த பெற்றோர், கொலையாளிகள் சிக்காததால் அவர்களின் தந்தையை கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அம்பத்தூர், சண்முகபுரம் நேதாஜி நகரில் வசித்து வருபவர் மேக்ஸ்வெல் (வயது 50). ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி மாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்பகுதியைச் சார்ந்த உதயகுமார் என்பவர் கொலைக்கு பழிக்குபழியாக மேக்ஸ்வெல் கொலை செய்யப்பட்டது உறுதியானது. மேலும், உதயகுமாரின் தாயார் லதா (வயது 49) இக்கொலையை அரங்கேற்றியதும் அம்பலமானது.
அவரின் கூட்டாளிகளான அண்ணா நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 24), வினோத் (வயது 24), செங்குன்றம் யுவராஜ் (வயது 28), நாகராஜ் (வயது 62) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
உதயகுமார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேக்ஸ்வெல்லின் மகன்கள் மோசஸ், லாரன்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்கள் ஜாமினில் வெளியே வந்த நிலையில், அவர்களை கொலை செய்ய லதா கூட்டாளியுடன் திட்டம் போட்டு இருக்கிறார்.
சம்பவத்தன்று மாலை 6 மணி அளவில் மோசஸ் தனது வீட்டுக்கு வருவதை நோட்டமிட்ட கும்பல், அன்றே சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. சம்பவ நேரத்தில் மோசஸ், லாரன்ஸ் எங்கேயோ சென்றுவிட, மேக்ஸ்வெல் பழிக்குப்பழியாக கொல்லப்பட்டுள்ளார். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களில் நாகராஜ் உதயகுமாரின் தந்தை ஆவார்.