#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓரினசேர்க்கை உல்லாசத்திற்கு சென்ற வழக்கறிஞரிடம் வழிப்பறி.. ஆன்லைன் டேட்டிங் ஆப்பில் நூல்விட்டு சம்பவம்.!
தன்பாலின ஈர்ப்பில் ஆர்வம் கொண்ட வழக்கறிஞரை உல்லாசமாக இருக்கலாம் என அழைத்து வழிப்பறி செய்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அம்பத்தூர், திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் ரூபன் (வயது 35). இவர் வழக்கறிஞர் ஆவார். மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். ஓரினசேர்க்கை உல்லாசத்தில் ஆர்வம் கொண்டு இருந்த ரூபன், ஆன்லைன் டேட்டிங் செயலியில் நண்பர்களை சந்தித்து உல்லாசமாக இருப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே ஆப்பிள் திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்த விக்கி (வயது 27) என்ற வாலிபரோடு அறிமுகம் ஏற்பட, இருவரும் அம்பத்தூர் இரயில் நிலைய பகுதியில் ஓரினசேர்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
வழக்கறிஞர் சம்பவ இடத்திற்கு சென்றபோது விக்கியோடு, அவரின் நண்பர் மானாமதுரை சக்திகுமார் (வயது 24) என்பவர் இருந்துள்ளார். மூவரும் பேசிக்கொள்கையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ரூபனை தாக்கிய இருவரும் விலையுயர்த்த செல்போன், தங்க செயின் போன்றவற்றை பறித்து சென்றுள்ளனர்
இந்த விஷயம் தொடர்பாக ரூபன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விக்கி, சக்தி குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் திட்டமிட்டு ஓரினசேர்கையாளரை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டதும் அம்பலமானது.