#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஏசி மின்கசிவால் பயங்கர தீ விபத்து: தாய்-மகள் உடல் கருகி பரிதாப பலி.. அம்பத்தூரில் சோகம்.!
சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் ஏசி, தற்போது மக்களின் உயிருக்கும் உலைவைத்து வருவது அதிர்ச்சியையும், சோகத்தையும் பலருக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் உள்ள அம்பத்தூர் மேனாம்பேடு, இந்திராநகர் பகுதியில் வசித்து வருபவர் ஹலீனா (வயது 50). இவரின் மகள் நஸ்ரியா (வயது 16). ஹலீனாவின் கணவர் இவர்களுடன் இல்லை.
இதனால் தாய்-மகளாக இருவரும் வசித்து வருகிறார்கள். இருவரும் நேற்று இரவு வீட்டில் ஏசியை ஆன் செய்துவிட்டு உறங்கி இருக்கின்றனர். இந்நிலையில், அதிகாலை நேரத்தில் வயர்களில் தீப்பிடித்து எரிந்ததாக தெரியவருகிறது.
இதனால் படுக்கையறை முழுவதும் புகை சூழ்ந்து கொண்ட நிலையில், தாய்-மகள் மூச்சு திணறலில் ஏற்பட்டு பரிதாபமாக பலியாகி இருக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், விரைந்து வந்த அதிகாரிகள் இருவரையும் சடலமாக மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்தில் வீட்டிலிருந்த உடைமைகளும் எரிந்து நாசமாகி இருக்கின்றது. ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.