#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரூ.82 இலட்சம் கொள்ளை விவகாரம்.. முன்னாள் பணியாளர் கைது., விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை.!
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.82 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல் அட்டெம்ப்டில் கைதாகி சிறைக்கு சென்றும் திருந்தாமல் நடந்த வழிப்பறி தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
சென்னையில் உள்ள அம்பத்தூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த தனியார் நிறுவன ஊழியரான விஜயகுமார் (வயது 37) என்பவரை தாக்கி, ரூ.82 இலட்சம் கடந்த 9 ஆம் தேதி களவாடப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இதே நிறுவன ஊழியரை தாக்கி ரூ.5 இலட்சம் பறித்த வழக்கில், இந்நிறுவனத்தில் 3 வருடமாக பணியாற்றி வந்த முன்னாள் ஊழியர் சுப்பிரமணியன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் தற்போது ஜாமினில் வெளியே வந்ததும் தெரியவந்தது.
இதனால் சுப்பிரமணியத்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரூ. 82 இலட்சத்தை கொள்ளையடித்தது உறுதியானது. மேலும், சிறையில் இருக்கும் போது கஞ்சா கேசில் உள்ளே வந்த பள்ளிக்கரணை அப்பு @ ஸ்ரீகாந்துடன் (வயது 19) சுப்பிரமணியத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனியாடுது, இருவரும் ஜாமினில் வெளியே வந்த நிலையில், மொத்தமாக பணம் அடித்து செட்டில் ஆகிவிடலாம் என திட்டம்போட்டு ரூ.82 இலட்சத்தை கொள்ளையடித்தது உறுதியானது. இதனையடுத்து, சுப்பிரமணியனை கைது செய்த காவல் துறையினர் ஸ்ரீகாந்த் மற்றும் அவனின் 2 நண்பர்களை தேடி வருகின்றனர்.