#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடும்ப தகராறில் ஆவேசம்.. மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. அம்பத்தூரில் அதிர்ச்சி.!
சென்னையில் உள்ள அம்புத்தூர், நேரு நகரை சேர்ந்தவர் ஹரிஷ் பிரம்மா (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஹரிஷின் மனைவி ரஷீயா கத்துனா (வயது 22). இருவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். கடந்த சில மாதமாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை நேரத்திலும் தம்பதியிடையே கருத்து வேறுபாடு தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த ஹரிஷ் மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் ரஷீயா மயங்கி விழவே, அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
மருத்துவமனையில் ரஷீயாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹரிஷ் பிரம்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.