மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமானப்படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை : கழுத்தில் பாய்ந்த 3 தோட்டாக்கள்.. ஆவடியில் அதிர்ச்சி.!
சென்னையில் உள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் உள்ளது. இம்மையத்தில் டெக்னீசியன் & சட்டம் தொடர்பான பயிற்சியானது வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சியை நிறைவு செய்யும் வீரர்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் வசித்து வரும் கோடிநூர் மாவட்டத்தை சேர்ந்த நீரோவ் சௌஹான் (வயது 22) என்பவர், கடந்த ஆண்டில் பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் புதன்கிழமை மதியம் விமானப்படை அலுவலகம் முன்பு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, மாலை 4 மணியளவில் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு கழுத்தில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதில், 3 தோட்டாக்கள் கழுத்து வழியாக பாய்ந்து நீரோவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.