மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
89 ரௌடிகள் ஒரே இரவில் கைது; குற்றத்தை தடுக்க அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்த ஆவடி காவல்துறை.!
தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னையில் குற்றங்களை பிரித்து கையாண்டு விரைந்து அதனை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு சென்னை மாநகர காவல் துறை மூன்றாக பிரிக்கப்பட்ட ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன.
அந்த வகையில், ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் 25 காவல் நிலையங்கள் இருக்கின்றன. இந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்து வந்த நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள காவல் துறை இயக்குனர் சங்கர் அதிரடி நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை அடுத்து ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். இதன் பெயரில் காவல்துறையினர் ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து கொடூர கொலை மற்றும் ஆட்கடத்தல் போன்ற வழக்கில் ஈடுபடும் நபர்களின் வகைகளை பிரித்து, ஒரே இரவில் 89 ரவுடிகளை கைது செய்தனர்.