மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமியிடம் காதல் பெயரில் அத்துமீறிய காதலன்.. போக்ஸோவில் உள்ளே தூக்கிவைத்த காவல்துறை.!
பள்ளியில் பயின்று வரும் சிறுமியை காதலித்து வந்த இளைஞன், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதால் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ஆவடி, முத்தாபுதுப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் ஆவடி செக்போஸ்ட் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
சிறுமியின் தோழி திருவள்ளூரில் வசித்து வருகிறார். அந்த தோழியின் உறவினர் யுவராஜ் (வயது 21) என்பவர், 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு வரவில்லை என்பதால், பெற்றோர் முத்தாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்துகையில் யுவராஜ் சிறுமியிடம் காதலிப்பதாக நடித்து ஆசை வார்த்தைக்கூறி அழைத்து சென்று பலாத்காரம் செய்தது உறுதியானது.
இதனையடுத்து, யுவராஜை கைது செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.