மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெட்ரோல் குண்டு எதுக்கு வீசுனீங்க.. இதுதான் காரணம் - பாஜகவை பதறவைத்த சம்பவத்தில் பகீர் வாக்குமூலம்.!
சென்னையில் உள்ள தி. நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அங்கு மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்படவே, இந்த விஷயம் தொடர்பாக தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வினோத் என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில், கைதான வினோத் என்ற கருக்கா வினோத் அதிகாரிகள் விசாரணை நடத்துகையில், "பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் நீட் விலக்கிற்கு ஒத்துழைக்காமல் பிரச்சனை செய்கிறது. அவர்களின் நீட் நிலைப்பாடு காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில், அவர்களது மாநில கட்சி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசினேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.