நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
சென்னை மக்களே உஷார்! கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் மாயம்!
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் மயமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா காட்டு தீ போல பரவி வருகிறது.
நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 324 பேருக்கு கொரோனா உறுதியானது.
இந்நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் திடீரென மயமாகியுள்ளார். இவர் பள்ளிக்கரணையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. காணாமல் போன முதியவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.