மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாக்கு பதிவு மையத்திற்கு செல்ல முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கார் வசதி! உபேர் நிறுவனம் அறிவிப்பு..
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை ஓட்டுபோட இலவசமாக அழைத்துச்செல்வதாக உபேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து தமிழகமே பெரும் பரபரப்பில் உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தநிலையில், அனைத்து வகையான தேர்தல் பிரச்சாரங்களும் இன்று மாலை 7 மணியுடன் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நாளன்று முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவுக்கு செல்வதற்கு இலவசமாக கார் சேவை தருவதற்கு உபேர் நிறுவனம் முன்வந்துள்ளது.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையத்திற்கு செல்ல உபேர் நிறுவனத்தின் ஆப் மூலம் முன்பதிவு செய்யவேண்டும். இவ்வாறு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உபேர் நிறுவனம் ஒரு கூப்பன் கோடை கொடுக்கும். வாக்காளர் அந்த கூப்பன் கோடை பயன்படுத்தி 5 கி.மீ தொலைவிற்குள் அல்லது 200 ரூபாய் வரை இலவசமாக பயணம் செய்யலாம்.
200 ரூபாய் தாண்டும் பட்சத்தில் மீதமுள்ள தொகையை பயனர் உபேர் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். அதேபோல் வாக்குசாவடி மையத்தில் இருந்து திரும்பும்போதும் பயனர் அதே கூப்பன் கோடை பயன்படுத்தலாம் என்று உபேர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேவையானது சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் ஊபர் நிறுவனம் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.