மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊஞ்சல் கயிறு எமனானதால் சோகம்: தந்தையிடம் பேசிய மகனுக்கு 10 நிமிடத்தில் நடந்த சோகம்..!
சென்னையில் உள்ள துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் வசித்து வருபவர் வேலாயுதம். இவர் பெயிண்டராக வேலை பார்க்க வருகிறார். வேலாயுதத்தின் மனைவி மகாலட்சுமி, தம்பதிகளுக்கு 15 வயதுடைய மணிகண்டன், 12 வயதுடைய செல்வா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இரண்டாவது மகன் செல்வா அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது விடுமுறை காரணமாக செல்வா வீட்டிலிருந்த நிலையில், தனது தந்தைக்கு கண்ணில் மருந்து ஊற்றி விட்டு பின் வாசலில் இருக்கும் சேலை ஊஞ்சலில் விளையாடி இருக்கிறார்.
அச்சமயம், தவறுதலாக ஊஞ்சலில் கட்டி இருந்த சேலை செல்வாவின் கழுத்தை இருக்கவே, பேச்சு மூச்சின்றி சிறுவன் மயங்கி விழுந்திருக்கிறான்.
மருந்து கண்களில் இறங்கியதும் 15 நிமிடம் கழித்து வெளியே வந்த தந்தை, தனது மகன் ஊஞ்சலில் மயங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் சிறுவன் பலியாகிவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.