மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவதூறாக பேசியதால் கள்ளக்காதலன் கழுத்தை நெரித்து கொலை; கள்ளக்காதலி வெறிச்செயல்.!
சென்னையில் உள்ள எண்ணூர் வ.உ.சி நகரில் வசித்து வருபவர் சுப்பையா (வயது 56). இவர் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் மனைவி இறந்துவிட்ட நிலையில், மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி தங்களது குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகிறார்கள். இந்நிலையில், சுப்பையாவுக்கும் - அப்பகுதியைச் சார்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்மணி செல்வி (வயது 48) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் ஒரு சமயத்திற்கு மேல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இருவருக்கும் மது போதை பழக்கம் இருந்த காரணத்தால், தினமும் இரவு நேரங்களில் மதுபானமும் அருந்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் ஒன்றாக இருந்த நிலையில், சுப்பையா தனது கள்ளக்காதலி செல்வியை ஆபாசமாக திட்டி அடித்ததாக தெரிகிறது. இதனால் செல்வி நள்ளிரவு நேரத்தில் சுப்பையாவின் கழுத்தை துணியால் நெரித்து கொலை செய்துள்ளார்.
அதிகாலை 3 மணி அளவில் சுப்பையாவின் மகள் வீட்டிற்கு சென்ற செல்வி, சுப்பையா போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், சடலத்தை கீழே இறக்கி வைத்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
பின் இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்திய நிலையில், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
செல்வியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த செய்த போது, முன்னுக்கு பின் முரணான தகவல் கிடைக்கவே, அவரிடம் நடந்த விசாரணையில் சுப்பையா போதையில் ஆபாசமாக திட்டியதால் கொலை செய்ததை உறுதி செய்தார்.
விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட கள்ளக்காதலி செல்வி சிறையில் அடைக்கப்பட்டார்.