மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கம், செல்போன், குங்குமப்பூ கடத்திவந்த 149 குருவிகள் ஒரேநாளில் கைது; சென்னை விமான நிலையத்தை அதிரவைத்த கடத்தல் சம்பவம்.!
சென்னை விமான நிலையத்திற்கு ஓமனில் இருந்து விமானம் நேற்று வந்தது. இந்த விமானத்தில் 156 பேர் பயணம் செய்த நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தவிர்த்து பிற 149 பேரும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் குருவிகள் என்பது அம்பலமாகியுள்ளது.
இவர்கள் கூட்டமாக சேர்ந்து விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ஓமனில் இருந்து சென்னை வந்தது உறுதியான நிலையில், விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் முன்பதிவு டிக்கெட் விபரங்களை வைத்து சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
அப்போது, 148 குருவிகள் சேர்ந்து கடத்தல் செயலில் ஈடுபட்டு சிக்கிக்கொண்டனர். இவர்களிடம் இருந்து 13 கிலோ தங்கம், 2,500 செல்போன், குங்குமப்பூ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று காலை முதலாக 8 மணிநேரத்தை கடந்து விசாரணை நடந்த நிலையில், 149 குருவிகளும் சென்னையை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானத்தையே அவர்கள் தனித்தனியே புக்கிங் செய்து பயணித்ததும் அம்பலமாகியுள்ளது.