பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு வந்த சிக்கல்.. அறிக்கை கேட்ட மத்திய அரசு.. நடந்தது என்ன?.!



Chennai Foxconn Company Central Govt Report

 

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல பாக்ஸ்கான் செல்போன் உற்பத்தி நிறுவனம், ஆப்பிள் ஐபோன் பாகங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கனான ஆண்-பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கென பிரத்தியேக விடுதி, போக்குவரத்து வசதி ஆலை நிறுவனத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அறிக்கை கேட்கும் மத்திய அரசு

இதனிடையே, இந்நிறுவனத்தில் திருமணம் முடிந்த பெண்களை வேலைகளுக்கு எடுப்பது இல்லை என தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து செய்திகளும் வெளியான நிலையில், மத்திய அரசின் கவனத்திற்கு இவ்விசயம் சென்றுள்ளது. இதனால் மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகம், தமிழ்நாடு தொழிலாளர் துறையிடம் விரிவான அறிக்கை கேட்டு இருக்கிறது. 

இதையும் படிங்க: கண்ணை மறைத்த காமம்... கொலையில் முடிந்த கள்ளக்காதல்.!! எமனாக மாறிய நண்பன்.!!

இந்த விஷயம் குறித்து தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா அரசியலமைப்பு சம ஊதியசட்டத்தின் 197 பிரிவு 5 ன் கீழ் ஆண்-பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் பாகுபாடு காண்பிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: டேய் படிடா... அறிவுரை கூறிய அம்மா, தம்பி கழுத்தறுத்து கொலை.. அமைதியாக இருந்து அதிர்ச்சி தந்த மூத்த மகன்.!