Gold Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு.. இன்றைய விலை நிலவரம் உள்ளே.!

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி சுங்கவரி 15% என்ற அளவில் இருந்தது.
இதையும் படிங்க: மிதிவண்டியில் சென்றபோது சோகம்.. சக்கரத்தில் சிக்கி 14 வயது சிறுவன் மரணம்.. பரிதவிப்பில் தாய்.!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்தாலும், அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதனால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது.
இன்று சென்னையில் கிராம் தங்கம் ரூ.7435 க்கும், சவரன் தங்கம் ரூ.59,480 க்கும் விற்கப்படுகிறது. நேற்றைவிட தங்கம் சவரனுக்கு ரூ.120ம் கிராமுக்கு ரூ.15 ம் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை மாற்றங்கள் இன்றி ரூபாய் 1,04,000 க்கு விற்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை: சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம்: ஆபாச வீடியோ பகிர்ந்தவர் கைது.!