மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை: அரசு மருத்துவமனை கேன்டீனில், பஜ்ஜியை சாப்பிட்ட எலி: கேன்டீனுக்கு சீல் வைத்து அதிரடி.!
சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை, நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாகும்.
இந்த மருத்துவமனையில் பொதுமக்களின் வசதிக்காக கேன்டீன் நடத்தப்படுகிறது. இங்கு உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று கேன்டீனில் உள்ள பஜ்ஜி உட்பட சில உணவுகளை எலிகள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தன. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வீடியோ எடுத்தவாறு கேன்டீன் நிர்வாகத்திடம் கேள்விகளை முன்வைத்தனர்.
இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ஊடகங்களில் செய்தியாக வந்தன. இதனையடுத்து, மருத்துவமனை முதல்வர் பாலாஜி, தனியார் பொறுப்பில் நடத்தப்பட்டு வந்த கேன்டீனை உடனடியாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது கேன்டீன் உரிமத்தை ரத்து செய்து, சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கேண்டீனில் தின்பண்டங்களை உண்ணும் எலி.. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவலம் #Chennai #StanleyHospital #Canteen #Rat #NewsTamil24x7 pic.twitter.com/YyLOoE9MV0
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) November 13, 2023