மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: சாலை வழிகாட்டி முறிந்து விழுந்து விபத்து.. ஒருவர் பலி., 2 பேர் படுகாயம்..!
சென்னையில் உள்ள கிண்டி, ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் அருகே சாலை வழிகாட்டி பலகை உள்ளது. இன்று மதியத்திற்கு மேல் வழிகாட்டி பலகை திடீரென முறிந்து சாலையில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில், அவ்வழியே சென்ற இளைஞரின் மீது இரும்பு பாரம் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், சாலை வழியே சென்ற மாநகர பேருந்து, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் ஆகியவையும் சேதமடைந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.