மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை முயற்சி.. 55 வயது கொடூரன் கைது.!
மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள கிண்டி, வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரோஜா (வயது 68). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 30 வயதில் மனவளர்ச்சி குன்றிய மகள் இருக்கிறார்.
கடந்த டிச. மாதம் 16 ஆம் தேதி ரோஜா பூ வாங்குவதற்கு கோயம்பேடு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் அவரின் மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு, வீட்டிற்குள் புகுந்த அப்பகுதியை சார்ந்த சந்தா (வயது 55) என்பவன், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த விஷயம் பெண்ணின் தாயாருக்கு தெரியவரவே, அவர் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டிச. 30 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக இருந்த சந்தாவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.