மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹோட்டல் பாத்ரூமில் ரகசிய செல்போன் கேமிரா விவகாரம்.. குற்றவாளி அதிரடி கைது..!
சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவர் திமுக மகளிரணி நிர்வாகியாக இருந்து வருகிறார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நேர்காணலுக்கு வந்த சமயத்தில், கிண்டி இரயில் நிலையம் அருகேயுள்ள சங்கீதா உணவகத்தில் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார்.
அப்போது, உணவகத்தில் இருக்கும் கழிவறையில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற நிலையில், அங்கு சுவற்றில் அட்டை பெட்டி வைக்கப்பட்டு செல்போன் கேமிரா ஆன் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக உடனடியாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், கழிவறையில் செல்போன் கேமிரா வைத்த உணவக பணியாளர் கண்ணன் என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். விருதுநகரை சொந்த ஊராக கொண்ட கண்ணன் என்ற தவக்கண்ணன், கடந்த 3 மாதமாக உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர், அவரின் கேடுகெட்ட செயலுக்கு வேறு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரின் செல்போனும் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் யாரிடமும் மிரட்டி பணம் பறித்து வந்தாரா? அல்லது பாலியல் குற்றத்தில் ஈடுபட்டாரா? எனவும் விசாரணை நடக்கிறது.