#Breaking: இரவு 7 மணிவரை இந்த 21 மாவட்டங்களில் கூரையை பிய்த்துகொட்டப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai IMD 21 May 2024 Evening 4 PM report Rain

 

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு, திருநெல்வேலி, தென்காசி உட்பட சில மாவட்டங்களில் மிககனமழைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. 

இதனால் பல மாவட்டங்களில் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிக கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மதுரை: தொடர் மழையால் உண்டான திடீர் அருவி; ஒத்தக்கடை ஆனைமலையில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்.! 

rain

இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

இந்நிலையில், இன்று இரவு 07:00 மணி வரையில் ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேவேளையில், செங்கல்பட்டு, கடலூர், கரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்காண மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: காலையிலேயே வெளுத்து வாங்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!