திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இன்று எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை?.. வானிலை மையம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உட்பட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 24 ஆம் தேதியான இன்று தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25 ஆம் தேதி, 26 & 27ஆம் தேதியை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்யலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.