காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தமிழ்நாட்டில் கடும் வெயிலுடன் குளுமையை தர வரும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெயில் நேரங்களில் பயணத்தை தவிர்க்கவும், உடல் உஷ்ணத்தை குறைக்கும் இயற்கையான பொருட்களை சாப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலான இடங்களில் கடுமையான வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்குத்திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனையொட்டியுள்ள மாவட்டங்கள், தமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான அல்லது லேசான மழை பெய்யலாம்.
அதேவேளையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்கள் மற்றும் சமவெளி மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை என்பது 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் வெப்பநிலை 39 டிகிரி செல்ஸியஸ் முதல் 29 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.