11 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை வெளுக்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai IMD Says 10 Districts Rain in Today till 10 PM 

வளிமண்டல மேலடுக்கு பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது. 

11 மாவட்டங்களில் மழை

இந்நிலையில், இன்று இரவு 10 மணிவரையில் நீலகிரி, திருப்பூர், கோவை, தி.மலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க: இன்ஸ்டாவில் எமனாக வந்த மெசேஜ்; மார்பிங் போட்டோவால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

weather report

4 இடங்களில் 100 டிகிரி பேரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை

அதேபோல, தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் மதுரை விமான நிலையம், மதுரை நகரம், நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பேரன்ஹீட் அளவை கடந்து பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: லாரி மீது டூவீலர் மோதி பயங்கரம்; 17 வயது சிறுவன் பரிதாப பலி., காவல்துறையின் அறிவுரை ஏற்காததால் சோகம்.!