அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.!



Chennai IMD Update 4 Day Moderate Rain

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 18ஆம் தேதியான இன்று முதல் 21 ஆம் தேதி வரையிலும், தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai

தலைநகர் சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது 35-36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையானது 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

chennai

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, வரும் நாளை 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மத்திய மேற்கு வங்ககடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களை அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.