திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னை ஐடி பெண் கத்தி முனையில் பலாத்காரம்.!! ஆட்டோ டிரைவர் தலைமறைவு.!!
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஐடி ஊழியர் ஹைதராபாத் நகரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஐடி ஊழியர்
சென்னையைச் சேர்ந்த 29 வயது பெண் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக சென்னை திரும்பிய பெண் நேற்று அதிகாலை சொந்த ஊரிலிருந்து ஹைதராபாத் நகருக்கு திரும்பி இருக்கிறார்.
கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம்
அதிகாலை நேரம் என்பதால் அந்தப் பெண் ஆட்டோவில் பயணம் செய்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் கூறிய இடத்திற்கு செல்லாமல் ஆளில்லாத மறைவான இடத்திற்கு பெண்ணை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவர் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: மணமேடையிலேயே அதகளம் செய்த மணமகன்; கட்டுப்படுத்த முடியாமல் தவித்த மணப்பெண்.. என்னவொரு ஆனந்தம்.!
குற்றவாளிக்கு வலை வீச்சு
இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள ஹைதராபாத் காவல் துறையினர் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். ஐடி நிறுவன பெண் ஊழியர் ஆட்டோ டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: நெருங்குகிறது... 11 மாவட்டங்களில் நாளை விடுமுறை; புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!