53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
4 பேரின் உயிரை காவுவாங்கிய விபத்து.. காரணம் என்ன?.. லிப்ட் கேட்டு பயணித்தவருக்கும் நடந்த சோகம்.. பரபரப்பு தகவல் அம்பலம்.!
கவரப்பேட்டையில் நடந்த லாரி - ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலியாகிய நிலையில், விபத்திற்கு காரணம் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் உள்ள கவரப்பேட்டை, தச்சூர் பகுதியில் ஐதராபாத் நகரில் இருந்து சென்னை வந்த தனியார் சொகுசு ஆம்னி பேருந்து விபத்திற்குள்ளானது. இந்த பேருந்தில் 30 பயணிகள் பயணம் செய்த நிலையில், அதிகாலை 5 மணியளவில் ஆந்திராவில் இருந்து சென்னை வந்த லாரியும் பேருந்துடன் பயணம் செய்துள்ளது.
ஆம்னி பேருந்து ஓட்டுநர் அதிவேகத்தில் பயணம் செய்த நிலையில், லாரி ஓட்டுனரும் போட்டா போட்டியுடன் பயணித்து இருக்கிறார். தனியார் பேருந்து ஓட்டுநர் லாரியை முந்திச்செல்ல முயற்சித்தபோது, திடீரென ஆம்னி பேருந்து தறிகெட்டு இயங்கி லாரியின் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் லாரி நொறுங்கி தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பேருந்தும் நொறுங்கிப்போனது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டு உயிருக்காக அலறித்துடிக்க, தகவல் அறிந்த கவரப்பேட்டை காவல் துறையினர், பொன்னேரி தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
பேருந்தின் பாகங்களை வெட்டியெடுத்து உயிரிழந்த சென்னை பயணி சதீஷ் குமார் (வயது 45), ரோஹித் (வயது 35), ஆந்திராவை சேர்ந்த கிளீனர் ஸ்ரீதர் (வயது 35) ஆகியோரின் உடல் மீட்கப்பட்டது. படுகாயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமணியல் அனுமதிக்கப்பட்ட, கும்மிடிபூண்டியை சேர்ந்த மகி என்பவரும் பலியாகினர்.
மகி சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், சென்னை செல்ல தனியார் பேருந்தில் கும்மடிபூண்டியில் இருந்து லிப்ட் கேட்டு பயணித்தபோது அவர் உயிரிழந்து இருக்கிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் கிஷோர் கைது செய்யப்பட்டார். அதிவேகத்துடன் போட்டிபோட்டு பயணம் செய்ததே விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.